|
கருவில் உருவான போதே என் முகம் தெரியாமல் விரும்பியவள் அவள் எனக்காக பத்திய சோறுண்டவள் அவள் தொப்புள்கொடி அறுந்ததும் என்னை அரவனைத்து ஆயிரம் முத்தமிட்டவள் அவள் தன் உதிரத்தையே உணவாக்கி எனக்கு உயிரளித்தவள் அவள் நான் உணவு உண்ண அந்த நிலவையே துணைக்களித்தவள் அவள் என்னுள் ஆயிரம் துன்பங்கள் இருப்பினும் அனைத்தும் மறந்து துயில்கிறேன் அவளது மடியில் யார் அவள் அவள்தான் இறைவன் எனக்களித்த தேவதை என் அம்மா..,