|
- தக்காளி - கால் கிலோ
- பச்சை மிளகாய் - 6
- இஞ்சி - ஒரு துண்டு
- பூண்டு - 8 பல்
- பெரிய வெங்காயம் - கால் கிலோ
- உப்பு - ஒரு மேசைக்கரண்டி
- கொத்தமல்லி - 2 கொத்து
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - அரை மேசைக்கரண்டி
- அரிசி மாவு / சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
|
|
தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை மிக்ஸியில்
விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
|
|
|
ஒரு பாத்திரத்தில் தக்காளியுடன் ஒரு கப்
தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வேக வைக்கவும். ஆறியதும் தோல் உரித்து மிக்ஸியில்
அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
|
|
|
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
|
|
|
பிறகு பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு 2 நிமிடத்திற்கு நன்கு வதக்கவும்.
|
|
|
2 நிமிடம் கழித்து இஞ்சி, பூண்டு விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
|
|
|
பிறகு தக்காளி விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விடவும்.
|
|
|
அதன் பின் அரிசி மாவை தண்ணீரில் கரைத்து
கொதிக்கும் தக்காளி கிரேவியில் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விட்டு,
கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
|
|
|
சுவையான தக்காளி கிரேவி தயார்.
|

