|
| கோச்சடையான் - தி லெஜன்ட் |
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்து வெளியாக உள்ள அனிமேஷன் திரைப்படம்
கோச்சடையான் ட்ரெய்லர், தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளிவருகிறது. ரஜினி, தீபிகா, சரத்குமார், ஷோபனா உள்பட பலரும் நடித்துள்ள 3 டி மோஷன்
கேப்சரிங் தொழில்நுட்பப் படம் கோச்சடையான்.
தமிழ், ஆங்கிலம், ஜப்பான் உள்பட 7 மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
படத்தின் இரு ஸ்டில்களைத் தவிர வேறு எதையும் இதுவரை தயாரிப்பாளரோ,
இயக்குநரோ வெளியிடவில்லை.
இந்த நிலையில் படத்தின் முதல் டீசர் (முன்னோட்டம்) மே மாதம் பிரான்சில்
நடக்கும் கேன்ஸ் பட விழாவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ரஜினியே இதை
வெளியிடுவதாகவும் தெரிவித்தனர்.அதற்கு முன்பாக தமிழ் ரசிகர்களுக்காக தமிழ் புத்தாண்டு அன்று ஒரு ட்ரெய்லரை
வெளியிட தற்போது படக்குழு திட்டமிட்டு வருவதாக செய்திகள் அடிபடுகின்றன.இன்னும் இந்த செய்தி உறுதி செய்யப்பட வில்லை என்றாலும், தமிழ் ரசிகர்களின்
எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இப்படம் அமைந்திருக்கும் என்று
நம்பப்படுகிறது.
இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கேஎஸ் ரவிக்குமார்
இயக்க மேற்பார்வையில், சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.