skip to main | skip to sidebar

Pages

  • Home

தமிழன் டா!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

மனிதனுக்குள் மிருகம்

2:38 AM | Publish by simplyBest

Photo: கோடானு கோடி உயிரினங்கள் கொப்பளித்துக் கொண்டிருக்கும் ஆச்சரியமான,
வண்ணமயமான கிரகம் | பூமி! நம் அறிவுக்குத் தெரிந்தவரையில் சூரிய மண்டலத் தில் வேறு
எங்கும் உயிரினங்கள் கிடையாது. பூமி ஓர் உயிருள்ள கிரகமாக மாற அது எடுத்துக் கொண்ட
காலம் மனிதக் கற்பனைக்கு அப்பாற் பட்டது!
சுமார் ஐந்நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருண்டு திரண்டு பெரும் பாறையாக உருவானது
பூமி. முதலில் கடல்கள் உருவாக, முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முன்புதான்
தண்ணீருக்கடியில் முதன் முதலில் தக்குனூண்டு உயிரினங்கள் தோன்றின. பூமியைச் சுற்றி,
நிலப்பகுதி மீது காற்று மண்டலம் உருவாக இன்னொரு நூறு கோடி ஆண்டுகள் பிடித்தது!
முப்பது கோடி ஆண்டு களுக்கு முன்பு ஆக்ஸிஜன் உருவாக்கும் தாவரங்கள் தோன்றின.
மற்ற எல்லாவித உயிரினங்களும் தோன்றுவதற்காக பூமியின் மேற்பரப்பு தயாரானது பத்து
கோடி ஆண்டுகளுக்கு முன்புதான்!
மனிதன் | பூமியில் சில லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய லேட்டஸ்ட் உயிரினம்!
மனிதர்கள் குரங்குகளுக்கு நெருக்கமான உறவு என்றால், மற்ற பாலூட்டிகளுக்கு குரங்குகள் நெருக்கமான உறவு. பாலூட்டிகள்
நியாண்டர்தால் மனிதன்..
டோடோ பறவை
பறவைகளுக்கு உறவு. பறவைகள் பாம்புகளிலிருந்து தோன்றியவை! இப்படியே பின்னோக்கிப் போனால் மைக்ராஸ்கோப் வழியாக
மட்டுமே பார்த்தால் தெரிகிற, ஒரே ஒரு செல் உள்ள உயிரினம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம்!
சூரிய ஒளியில் கிடைக்கும் சக்தியை மட்டுமே பெற்றுக் கொண்டு உயிர் வாழ்ந்த ஸயனோ
பாக்டீரியா என்கிற (ஒரே ஒரு செல் உள்ள) உயிரினம்தான் மனிதனின் முதல் உண்மையான
முன்னோர்! (ஒரே செல் உள்ள இரண்டு விதமான பாக்டீரியாக்களில் ஒன்றில் உயிர் பிறந்தது.
மற்றொன்று நோயை ஏற்படுத்தியது. இரண்டுமே ஒரே சமயத்தில் தோன்றியவை!) அதிலிருந்து
படிப்படியாக இரண்டு செல், 4, 8... என்று முன்னேறி, பிற்பாடு 50 மில்லியன் மில்லியன் செல்கள்
அடங்கிய ஆச்சரியமான, உயிருள்ள கட்டடம்தான் (ஆர்க்கிடெக்சர்!) மனிதன். ஒரு செல்லிலிருந்து
துவங்கி உண்மையிலேயே விஸ்வரூபம்!
பூமியின் உயிர்த்துடிப்பான வரலாறு பற்றித் தெரிந்து கொண்ட ஒரே உயிரினம் மனிதன்தான். மிகுந்த
பொறுப்பு உணர்வைத் தரவேண்டிய அறிவு அது. ஆனால் மனிதனின் நடவடிக்கைகளில் அந்த அறிவு
தெரிகிறதா?!
பூமியையும், இயற்கையையும், மற்ற படைப்புகளையும் அறிவுப்பூர்வமாகக் காக்கும் ஓர் உயிரினமாக
உருவெடுத்திருக்க வேண்டிய மனிதன் அழிக்கும் உயிரினமாக மாறியது எப்படி?!
ஆப்பிரிக்கக் காடுகளில் சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு செங்குத்தாக நிமிர்ந்து நின்று நடந்த Ôகுரங்கு மனிதன்Õ மற்ற
குரங்குகளிடமிருந்து (சிம்பன்ஸி உட்பட) ஒரு விஷயத்தில் குறிப்பாக மாறுபட்டான். அவன் கற்களைத் தேய்த்துக் கூர்மையாக்கி
ஆயுதங்கள் தயாரித்தான். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கும் சென்று தோண்டியெடுத்த இப்படிப்பட்ட கற்கால
ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் பல லட்சம் ஆண்டு களுக்கு முன்பு ஆயுதம் இல்லாமல் மனிதன் வெளியே கிளம்பியிருக்
கவே மாட்டான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது!
மனிதன் தோன்றிய பிறகு சுமார் பதினைந்து லட்சம் ஆண்டு களுக்கு ஆப்பிரிக்கக் காடுகளைவிட்டு அவன்
வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது! பிறகுதான் மெள்ள மெள்ள ஆசியாவுக்கு, ஐரோப்பா வுக்கு
என்று அவனுடைய பயணம் துவங்கியது.
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மனித இனங்கள் (நாமும் நியாண்டர்தால் இனமும்) உலகின் பல
பகுதிகளுக்கு குடியேற ஆரம்பித்துவிட்டன. அப்போது மனிதன் கண்டுபிடித்த ஒரே விஷயம் | தீ!
மற்றபடி மனித இனத்துக்கு மொழி கிடையாது, விவசாயம் கிடையாது, வீடு கிடையாது, கலை கிடையாது,
குடும்பம் கிடையாது... தவிர, யாருமே நாற்பது வயதைத் தாண்டாததால் மாதவிடாய் நின்றுபோவது கூடக் கிடையாது!
ஆனால் மனிதர்களோடு கூடவே பூமியில் வளைய வந்து கொண்டிருந்த வேறொரு (நியாண்டர்தால்) மனித இனம் அடியோடு, சுமார்
40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்தொழிந்து போனது.
தன்னைவிட சற்று புத்திசாலித்தனம் குறைச்சலாக இருந்த நியாண்டர்தால் இனத்தை வேட்டையாடித் துரத்திக் கொன்று தீர்த்தவர்கள்
மனிதர்களே. கொலைகார ஆயுதங்களைத் தயாரிக்கக்கூடிய அறிவாற்றல் அவன் வேலையைச் சுலபமாக்கியது! பிற்பாடு உணவுக்காகவும்,
நிலத்துக்காகவும் பெண்ணுக்காகவும் தங்களுக்குள்ளேயே மனிதர்கள் வன்முறையில் இறங்கினார்கள். எந்த உயிரையும் அழிக்க முடியும்
என்கிற அறிவு மனிதனுக்கு ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது!
சுமார் நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்த நிகழ்ச்சியை ‘கிரேட்
லீப் ஃபார்வர்டு’ (நிக்ஷீமீணீtலிமீணீஜீ திஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ) என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது மனிதன் முழுமையான
பரிணாம வளர்ச்சி அடைந்து பிரும்மாண்டமாகத் தாவி முன்னேறிய காலக்கட்டம் அது! மொழி, கலை, குடும்பம்... எல்லாமே
துவங்கியது அப்போதுதான்.
கூடவே மனிதனின் அழிவுச் செயல்களின் வேகமும் அதிகரித்தது. உதாரணமாக 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில்
மனிதன் குடியேறியவுடன் அங்கே வசித்த முக்கால்வாசி உயிரினங்களை அவன் வேட்டையாடி அடியோடு கொன்று தீர்த்தான்.
அப்போது ஆஸ்திரேலியாவில் யானை, காண்டாமிருகம் சைஸுக்கு ஏராளமான விலங்கினங்கள் வளையவந்தன. இன்று அங்கே
உயிரோடு உள்ள ஒரே பெரிய சைஸ் விலங்கினம் கங்காரு மட்டுமே என்றால் மனித இனத்தின் வேட்டை வெறியைப் புரிந்து
கொள்ளலாம்! (ஒரு காலத்தில் யானை உயர கங்காரு இனம் கூட அங்கே இருந்து, பிறகு மனிதர்களால் கொன்று அழிக்கப்பட்டது.)
Ôபூமியை இருண்ட மேகங்கள் அடியோடு மூடிக்கொண்டது போல வன்முறை மேகங்கள் அப்போதே மனித சமுதாயத்தைச் சூழ்ந்து
கொள்ளத் தொடங்கியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் வருத்தத்தோடு.
பறவைகளை எடுத்துக் கொள்வோம். ஏதாவது ஓர் உயிரினம் உலகெங்கும் நுணுக்கமாக கவனிக்கப்பட்டு வருகிறதென்றால் அது பறவை
இனமே! பறவைகள் ஒளிந்து கொள்வதில்லை. அவைகளுக்கு இரவு நடமாட்டம் கிடையாது என்பதால் அவைகளைச்
சுலபமாகக் கண்காணிக்க முடியும். தவிர, பறவைகளை வெறித்தனமாக நேசிப்பவர்கள் உலகெங்கும் ஏராளமாக உண்டு.
சுற்றுவட்டாரத்தில் குறிப்பிட்ட ஒரு பறவையைக் காணோம் என்றால் கூட அவர்கள் பதை பதைத்துப் போவார்கள்!
குரங்கு (கிஜீமீs) இனத்தில் மனிதன், சிம்பன்ஸி, கொரில்லா, உராங் உடான், கிப்பன் என்று ஐந்து வகைகள் இருப்பதுபோல, உலகில்
சுமார் 9,000 விதமான பறவை இனங்கள் உண்டு. இன்னும் கண்டுபிடிக்கப்படாத பறவை இனங்கள் இருக்கக்கூடும்.
கடந்த நானூறு ஆண்டுகளில் 108 பறவை இனங்களை அடியோடு மனிதன் அழித்துவிட்டதாக மிசிஙிறி என்று அழைக்கப்படும் சர்வதேச
இயக்கம் அறிவித்திருக்கிறது!
அண்மைக் காலத்தில் கடைசியாக அழிந்த பறவை அமெரிக்காவில், ஃப்ளாரிடா மாநிலக் கடற்கரையோரமாக வசித்த ஒருவித குருவி
இனம். அங்கே, கடற்கரையோரக் காடுகளை மனிதன் அழித்தபோது அந்தக் குருவி இனமும் கூடவே அழிந்து போனது. எப்படியோ
தப்பிப் பிழைத்து உயிரோடு இருந்த ஆறு குருவிகளை பதை பதைப்புடன் ஜூவுக்குக் கொண்டு போய் பாதுகாத்தும் பலனில்லை.
ஒவ்வொரு குருவியாக இறந்துபோக, தன்னந்தனியாக கூண்டின் ஒரு மூலையில் வெறித்துப் பார்த்தவாறு முடங்கிக் கிடந்த கடைசி
குருவி ஜூன் 16&ம் தேதி 1987&ல் உயிரைவிட்டது. மனிதனைப் போலவே பல கோடி வருஷங்கள் எடுத்துக்கொண்டு உருவான
படைப்பு அந்தக் குருவி! உலகின் அத்தனை விஞ்ஞானிகளும் இணைந்தால்கூட அந்தக் குருவியை மீண்டும் உருவாக்க முடியாது!
இதே போல மனித அலட்சியத்தாலும், அவன் வேட்டையாடியதாலும், கவனக்குறைவாலும் ஏராளமான பறவையினங்கள் அழிந்து
போய்விட்டன.
அழிந்த ஒரே காரணத்தால் உலகப்புகழ் பெற்ற டோடோ என்னும் (இறக்கையில்லாத) பறவை இனம் 17&ம் நூற்றாண்டு வரை
உயிரோடு இருந்தது. 1914&ல் பாஸெஞ்சர் புறா என்னும் பறவையினத்தை மனிதன் முட்டாள்தனமாக அழித்தது அப்போது தலைப்புச்
செய்தி! அதே ஆண்டில் கரோலினா பாரகீட் என்னும் கிளி வகை அழிந்தது. வடஅமெரிக்காவுக்குப் போனால் அங்கே சடை நாய்
போல முடிவளர்ந்த, நீண்ட தந்தங்கள் கொண்ட ராட்சத யானைகள் , சிங்கம், சிறுத்தை எல்லாமே ஒரு காலத்தில்
இருந்தது உண்டு. அவையெல்லாம் பிற்பாடு மனிதர்களால் அழிக்கப்பட்டன.
சைப்ரஸ் நாட்டில் தக்குனூண்டு சைஸ் யானைகள் மற்றும் நீர்யானைகளும் இருந்த காலம் ஒன்றுண்டு. அவை ஒன்றுகூட இப்போது
கிடையாது! தனித்தொடர் எழுதக்கூடிய அளவுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்களை மனிதன் அறிவில்லாமல் அழித்திருக்கிறான்.
தற்போதுகூட 1666 பறவையினங்கள் அழிவின் நுனியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படியாக, தான் அழிவுப் போதையில் போகிறோம் என்கிற உண்மைகூட மனிதனின் மூளைக்கு உறைக்கவில்லையோ என்பதற்கு
உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். கலிஃபோர்னியா மாநிலத்துக்கு என்று ஒரு கொடி உண்டு. அந்தக் கொடியில் உள்ள சின்னம்
கலிஃபோர்னியா காடுகளில் மட்டுமே வசிக்கும் ஒரு விசேஷமான கரடி பல ஆண்டுகளுக்கு முன்பே
அந்த ஸ்பெஷல் கரடிகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன என்பது கலிஃபோர்னிய மக்கள் பலருக்கும்
தெரியாது. கொடியில் மட்டும் கரடிச் சின்னம் தொடர்கிறது! எவ்வளவு விசித்திரமான சோகம் இது?! (இந்தியப் புலிகளுக்கும் அதே கதி
ஏற்பட்டிருக்கும் திட்டத்தின் மூலம் புலிகளைக் காப்பாற்றிய பெருமை முழுதும் இந்திரா காந்தியையே
சேரும்!)

மனிதனைத் தவிர, வேறெந்த உயிரினமும் மற்ற உயிரினங்களை அடியோடு அழிப்பதிலலை. தேவைப்பட்டால் மட்டுமே அவை
வேட்டையாடுகின்றன.அதே போல, சாகபட்சிணிகள் சுற்றுச்சூழலைக் கெடுப்பதில்லை. அவை முட்டாள்தனமாக தாவரங்களை அடியோடு
அழிப்பதில்லை.
மனிதனுக்கு இல்லாத ஏதோ நுண்ணறிவு மற்ற உயிரினங்களுக்கு உண்டோ என்று கூடச் சந்தேகம் வருகிறது!
உச்சகட்டமாக....
எந்த ஓர் உயிரினமும் தங்கள் இனத்தையே அழித்துக்கொள்ள முனைந்ததில்லை. மனிதனுக்கு மட்டுமே அந்தப் பெருமையும்
சேர்கிறது...!        - MADHAN's (மனிதனுக்குள் மிருகம் )
கோடானு கோடி உயிரினங்கள் கொப்பளித்துக் கொண்டிருக்கும் ஆச்சரியமான,

சேர்கிறது...! -

Labels: News 0 comments
0 Responses

« Newer Post Older Post »
Subscribe to: Post Comments (Atom)
Related Posts Plugin for WordPress, Blogger...

Topics

  • Cooking (1)
  • Food (11)
  • Fun (1)
  • Health (12)
  • How To (3)
  • Miracle (1)
  • News (11)
  • Our City (3)
  • Poetry (4)
  • Short Stories (2)
  • Tamil Cinema News (2)
  • Tamil Short Stories (1)
  • Technology Info (2)
Powered by Blogger.

Tweet

Popular Posts

  • மனிதரைக் கண்டால் மறையும் மூலிகை..!
    மனிதர்களாகிய அனைவருக்குமே பணத்தின் மீது எப்போதுமே ஒரு ஈடுபாடு உண்டு, அதுவும் உழைக்காமல் திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் கிடைக்கின்ற பணம் என்ற...
  • தக்காளி கிரேவி
    தக்காளி - கால் கிலோ பச்சை மிளகாய் - 6 இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 8 பல் பெரிய வெங்காயம் - கால் கிலோ உப்பு - ஒரு மேசை...
  • Kumari Kandam-(குமரிக்கண்டம் )
    தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்ட...
  • நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்
    இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக...
  • அம்மா.
    கருவில் உருவான போதே என் முகம் தெரியாமல் விரும்பியவள் அவள் எனக்காக பத்திய சோறுண்டவள் அவள் தொப்புள்கொடி அறுந்ததும் என்னை அரவனைத்து ஆயிரம் முத்...
  • உடல் பருமன் -Body Mass
    உடல் பருமன் சுட்டு (Body Mass Index) உடல் பருமன் சுட்டு எண் (Body Mass Index) என்பது ஒருவரது எடை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய உதவு...

Labels

Cooking (1) Food (11) Fun (1) Health (12) How To (3) Miracle (1) News (11) Our City (3) Poetry (4) Short Stories (2) Tamil Cinema News (2) Tamil Short Stories (1) Technology Info (2)
Copyright (c) 2010 தமிழன் டா!.